27.1.12

சிறுதாவூர் பங்களா விவகாரம்: ஸ்டாலின் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு - case against former Deputy CM and DMK Treasurer M.K. Stalin

சென்னை: தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் மீது முதல்வர் ஜெயலலிதா சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

M.K. Stalin



ஜெயலலிதா சார்பில் சென்னை நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் மனுத் தாக்கல் செய்துள்ளார். மனுவில், சிறுதாவூர் பங்களாவை நான் ஆக்கிரமித்துள்ளதாக டிசம்பர் 2-ந்தேதியன்று மாலை பத்திரிகை ஒன்றில் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு பரப்பும் வகையில் பொய்யான புகாரை தமது பேட்டியில் தெரிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.இந்த மனு மீதான விசாரணை திங்கள்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது

வழக்கின் பின்னணி

மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி உள்ளிட்டோர் மீது சென்னையைச் சேர்ந்த சேஷாத்திரி குமார் என்பவர் டிசம்பர் 1-ந்தேதியன்று நில அபகரிப்பு புகார் கொடுத்திருந்தார். இப்புகார் தொடர்பாக தாமே விளக்கம் அளிக்கிறேன் என்று காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு சென்ற ஸ்டாலின் மனு ஒன்றையும் காவல்துறையிடம் கொடுத்திருந்தார்.

மு.க.ஸ்டாலின் கொடுத்த மனுவில், முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்கும் சிறுதாவூர் பங்களா பினாமி பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் மீதும் நில அபகரிப்புப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தாம் கொடுத்த மனு தொடர்பாக செய்தியாளர்களிடம் ஸ்டாலின் தெரிவித்தது தற்போது அவதூறு வழக்காக விஸ்வரூபமெடுத்துள்ளது.



English summary
Tamilnadu chief minister Jayalaitha has filed a defamation case against former Deputy CM and DMK Treasurer M.K. Stalin regarding his comments on Siruthavoor bungalow.

No comments:

Post a Comment