10.8.16

ரயில்வேவுக்கு தகவல் அளிக்காமல் ரூ.342 கோடி ரயிலில் கொண்டு செல்லப்பட்டதா?

சேலத்திலிருந்து ரூ.342 கோடி கிழிந்த ரூபாய் நோட்டுகளை ஏற்றிக் கொண்டு சென்னை வந்த ரயிலில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க 3 ஆய்வாளர் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வங்கிகளில் இருந்து பெறப்பட்ட ரூ.342 கோடி கிழிந்த ரூபாய் நோட்டுகள் சேலம் பேர்லேண்ட்ஸ் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டது. 

இந்த பணத்துடன் சேலத்திலிருந்து  விரைவு ரயில் புறப்பட்டது. ரயில் கண்டெய்னரில் 226 மரப்பெட்டிகளில் அந்தப் பணம் கொண்டுவரப்பட்டது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்த ரயில், சேத்துபட்டு பகுதியில் உள்ள ரயில்வே பணிமனைக்குச் சென்றது. 

பின்னர் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு எழும்பூர் ரயில் நிலையம் வந்த ரயிலில் இருந்து பணத்தை கொண்டுசெல்வதற்காக ரிசர்வ வங்கி அதிகாரிகள் வந்தனர். அப்போது, கண்டெய்னரின் மேல் பகுதி உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

கண்டெய்னர் உள்ளே சென்று ஆய்வு செய்த போது 2 மரப்பெட்டிகள் மட்டும் உடைக்கப்பட்டு 5 கோடியே 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் கொள்ளை சம்பவம் குறித்து ரிசர்வ் வங்கி உயர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர். 

விருதாச்சலத்தில் ரயில் 1 மணி நேரம் நின்றதாக தகவல் தெரிவிக்கப்படும் நிலையில் கொள்ளை சம்பவம் எப்போது நிகழ்ந்தது என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, ரயிலில் அனுப்பப்படுவது பணம் தான் என்பதை வங்கி தரப்பில் ரயில்வே துறைக்கு தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

23 டன் எடைக்கான சரக்கு கட்டணமாக சுமார் 44 ஆயிரம் ரூபாய் மட்டும், வங்கி தரப்பில் செலுத்தப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரவிக்கின்றன. இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க 3 ஆய்வாளர் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நன்றி : http://ns7.tv/ta/342-crore-rupess-theft-train-rbi-didnt-inform-railway.html

27.1.12

ஐ.நா. அமைதி படையில் இலங்கை போர்க் குற்றவாளி! Major Gen. Sahvendra appointed to UN advisory peacekeeping group

ஐ.நா. அமைதிப்படையில் இலங்கை இராணுவத்தின் போர்க் குற்றவாளியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். 

ஐ.நா.வுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, ஐ.நா. அமைதிகாப்புப் படையின் நடவடிக்கைகள் தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் சிறப்பு ஆலோசனைக் குழுவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய பசிபிக் நாடுகள் குழுவின் சார்பிலேயே இவர் இந்த ஆலோசனைக் குழுவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

குழுவில் அங்கம் வகிக்கும் உயர்மட்டத் தூதுவர்கள் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து சவீந்திர சில்வா பணியாற்றவுள்ளார். 

இந்த ஆலோசனைக் குழுவுக்கு ஐ.நாவின் முன்னாள் பிரதிச்செயலரும் கனடாவின் முன்னாள் பிரதி தேசிய பாதுகாப்பு அமைச்சருமான லூயிஸ் பிரெசிரே, ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளுக்கான கீழ்நிலைச் செயலருமான ஜீன் மேரி குகேனோ ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இந்தக் குழு முதல்முறையாக இந்த மாதம் கூடி தமது பணிகளை கவனிக்கத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சவீந்திர சில்வா போர்க்குற்றங்களை இழைத்ததாக அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகளால் குற்றம் சாட்டப்பட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.



English Summary

Major General Shavendra Silva – Deputy Permanent Representative of Sri Lanka to the United Nations has been selected to the Special Advisory Group on Peace Keeping Operations established by the UN Secretary General to advise on rates of reimbursement to troop-contributing countries and related issues.

சிறுதாவூர் பங்களா விவகாரம்: ஸ்டாலின் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு - case against former Deputy CM and DMK Treasurer M.K. Stalin

சென்னை: தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் மீது முதல்வர் ஜெயலலிதா சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

M.K. Stalin



ஜெயலலிதா சார்பில் சென்னை நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் மனுத் தாக்கல் செய்துள்ளார். மனுவில், சிறுதாவூர் பங்களாவை நான் ஆக்கிரமித்துள்ளதாக டிசம்பர் 2-ந்தேதியன்று மாலை பத்திரிகை ஒன்றில் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு பரப்பும் வகையில் பொய்யான புகாரை தமது பேட்டியில் தெரிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.இந்த மனு மீதான விசாரணை திங்கள்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது

வழக்கின் பின்னணி

மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி உள்ளிட்டோர் மீது சென்னையைச் சேர்ந்த சேஷாத்திரி குமார் என்பவர் டிசம்பர் 1-ந்தேதியன்று நில அபகரிப்பு புகார் கொடுத்திருந்தார். இப்புகார் தொடர்பாக தாமே விளக்கம் அளிக்கிறேன் என்று காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு சென்ற ஸ்டாலின் மனு ஒன்றையும் காவல்துறையிடம் கொடுத்திருந்தார்.

மு.க.ஸ்டாலின் கொடுத்த மனுவில், முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்கும் சிறுதாவூர் பங்களா பினாமி பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் மீதும் நில அபகரிப்புப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தாம் கொடுத்த மனு தொடர்பாக செய்தியாளர்களிடம் ஸ்டாலின் தெரிவித்தது தற்போது அவதூறு வழக்காக விஸ்வரூபமெடுத்துள்ளது.



English summary
Tamilnadu chief minister Jayalaitha has filed a defamation case against former Deputy CM and DMK Treasurer M.K. Stalin regarding his comments on Siruthavoor bungalow.

அடிலெய்டு டெஸ்ட்: தோல்வியின் பிடியில் இந்தியா India need 334 runs to win - Not even a slim chance there!

அடிலெய்டு: அடிலெய்டில் நடக்கும் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி தோல்வியின் பிடியில் உள்ளது. 500 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி நான்காவதுநாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. இஷாந்த் சர்மா 2 ரன்களுடனும், விர்திமான் சாகா ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். 2வது இன்னிங்சில் சேவக் அதிரடியாக விளையாடி 62 ரன்கள் எடுத்தார். இந்த முறையும் சச்சின் 13 ரன்களுக்கும் டிராவிட் 35 ரன்களுக்கும், லஷ்மன் 35 ரன்னுக்கும்,காம்பீர் 3 ரன்னுக்கும்,கோக்லி 22 ரன்னிலும் அவுட்டானார்கள். முன்னதாக ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் 604 ரன்களும், இந்தியா 272 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.


English Summary
India need 334 runs to win - Not even a slim chance there!

மணிப்பூரில் குண்டுவெடிப்பு? ஒருவர் காயம் - Bomb blast in Manipur 1 Injured

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மணிப்பூரில் குண்டுவெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் குண்டு வைத்தவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

English Summary
Bomb blast in Manipur 1 Injured

கொலை வழ‌க்‌கி‌ல் ச‌சிகலா‌வி‌ன் உற‌வின‌ர் ராவண‌ன் கைது

அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் சசிகலா உறவின‌ர் ராவணனை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

வீ‌ட்டி‌ல் இரு‌ந்த ராவணனை கோவை காவ‌ல்துறை‌யின‌ர் இன்று கைது செய்து‌ள்ளன‌ர்.

இத‌னிடையே ‌வீடு இ‌டி‌ப்பு வழ‌க்‌கி‌ல் ச‌‌சிகலா‌வி‌ன் ம‌ற்றொரு உற‌வின‌ர் ‌திவாகரனையு‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் தேடி வரு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌திவாகர‌ன் தா‌க்குத‌ல் செ‌ய்து‌ள்ள மு‌ன்ஜா‌மீ‌ன் மனு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் வரு‌ம் 31ஆ‌ம் தே‌‌தி‌க்கு ‌விசாரணை‌க்கு வரு‌கிறது.



English Summary
Ravanan arrested in ADMK member death case

மணிப்பூரில் நாளை தேர்தல்!

இம்பால் : மணிப்பூர் சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது. உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப் மாநிலங்களில் சட்டப்பேரவை   தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 279 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மணிப்பூரில், நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால், மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மணிப்பூரில், ஆளும் காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே பிரதான போட்டி நிலவுகிறது.  


English Summary
Tomorrow, Election in Manipal 

அடிலெய்டு டெஸ்ட்: சேவக் அரைசதம்

அடிலெய்டு: அடிலெய்டில் நடக்கும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2வது இன்னிங்சில் இந்திய அணி கேப்டன் சேவக் அரைசதமடித்தார். 53 பந்துகளை சந்தித்த சேவக் 62 ரன்கள் எடுத்த நிலையில், லியோன் பந்துவீச்சில் பாண்டிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.


English Summary
Shewag gone for 62 in 4th test match

புதிய அமைச்சர்கள் என்.ஆர்.சிவபதி, முக்கூர் சுப்பிரமணியன் இன்று மாலை பதவியேற்பு


சென்னை: முதல்வர் ஜெயலலிதாவால் புதிய அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ள என்.ஆர்.சிவபதி மற்றும் முக்கூர் சுப்பிரமணியன் ஆகிய இருவரும் இன்று மாலை பதவியேற்கவுள்ளனர்.

அமைச்சரவையில் நேற்று இரவு முதல்வர் ஜெயலலிதா சில மாற்றங்களைச் செய்தார். அமைச்சர்களாக இருந்து வந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நீக்கப்பட்டனர். இருவரும் சசிகலா ஆதரவாளர்கள்.

இவர்களுக்குப் பதில் புதிய அமைச்சர்களாக சிவபதியும், முக்கூர் சுப்பிரமணியனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிவபதி பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல முக்கூர் சுப்பிரமணியன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் தவிர கே.ஏ.செங்கோட்டையனின் இலாகா மாற்றப்பட்டு அவர் வருவாய்த்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேர்க்கப்பட்டுள்ள இரு புதிய அமைச்சர்களும் இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளனர். அவர்களுக்கு ஆளுநர் கே.ரோசய்யா, பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் - சிறு குறிப்பு

என்.ஆர்.சிவபதி

என்.ஆர்.சிவபதி 1963-ல் பிறந்தவர். தொட்டியம் அருகே உள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்தவர். எம்.ஏ. பி.எல்., படித்துள்ளார். 1991-ல் சட்டமன்ற தேர்தலில் தொட்டியம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கட்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், மாநில மாணவர் அணி செயலாளர், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர், மாவட்ட துணை செயலாளர், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர், திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை பொறுப்பாளர் என கட்சி பணி ஆற்றியுள்ளார். இவரது தந்தை பெயர் ரங்கராஜன், தாயார் சரோஜா. இவருக்கு சாந்தி என்ற மனைவியும் ஜெயசாந்தி, லட்சுமிபிரியா என்ற இரு மகள்களும் உள்ளனர்.

1991 முதல் 96 வரை இவர் எம்.எல்.ஏவாக இருந்தார். தற்போது முசிறி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடந்த ஆண்டு மே 16ம் தேதி இவர் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது மீண்டும் அமைச்சராகியுள்ளார். ஒரே ஆட்சிக்காலத்தில் 2 முறை அமைச்சராகப் பொறுப்பேற்று புது சாதனை படைத்துள்ளார்.

இவருடைய இமெயில் முகவரிmlamusiri@tn.gov.in

முக்கூர் சுப்பிரமணியன்

1959ம் ஆண்டு முக்கூர் கிராமத்தில் பிறந்தவர். பி.ஏ. படித்துள்ள இவரது அடிப்படைத் தொழில் விவசாயம். 2001ம் ஆண்டு முதல் 2006 வரை முக்கூர் பஞ்சாயத்து யூனியன் தலைவராக இருந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டச் செயலாளராகவும் இருந்துள்ளார்.

சுப்பிரமணியன், செய்யார் தொகுதி அதிமுக உறுப்பினர் ஆவார்.

இவருடைய இமெயில் முகவரிmlacheyyar@tn.gov.in



English summary
New ministers N R Sivapathy and Mukkur Subramanian will take oath today evening at Raj bhavan.