சேலத்திலிருந்து ரூ.342 கோடி கிழிந்த ரூபாய் நோட்டுகளை ஏற்றிக் கொண்டு சென்னை வந்த ரயிலில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க 3 ஆய்வாளர் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வங்கிகளில் இருந்து பெறப்பட்ட ரூ.342 கோடி கிழிந்த ரூபாய் நோட்டுகள் சேலம் பேர்லேண்ட்ஸ் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டது.
இந்த பணத்துடன் சேலத்திலிருந்து விரைவு ரயில் புறப்பட்டது. ரயில் கண்டெய்னரில் 226 மரப்பெட்டிகளில் அந்தப் பணம் கொண்டுவரப்பட்டது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்த ரயில், சேத்துபட்டு பகுதியில் உள்ள ரயில்வே பணிமனைக்குச் சென்றது.
பின்னர் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு எழும்பூர் ரயில் நிலையம் வந்த ரயிலில் இருந்து பணத்தை கொண்டுசெல்வதற்காக ரிசர்வ வங்கி அதிகாரிகள் வந்தனர். அப்போது, கண்டெய்னரின் மேல் பகுதி உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கண்டெய்னர் உள்ளே சென்று ஆய்வு செய்த போது 2 மரப்பெட்டிகள் மட்டும் உடைக்கப்பட்டு 5 கோடியே 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் கொள்ளை சம்பவம் குறித்து ரிசர்வ் வங்கி உயர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
விருதாச்சலத்தில் ரயில் 1 மணி நேரம் நின்றதாக தகவல் தெரிவிக்கப்படும் நிலையில் கொள்ளை சம்பவம் எப்போது நிகழ்ந்தது என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, ரயிலில் அனுப்பப்படுவது பணம் தான் என்பதை வங்கி தரப்பில் ரயில்வே துறைக்கு தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
23 டன் எடைக்கான சரக்கு கட்டணமாக சுமார் 44 ஆயிரம் ரூபாய் மட்டும், வங்கி தரப்பில் செலுத்தப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரவிக்கின்றன. இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க 3 ஆய்வாளர் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நன்றி : http://ns7.tv/ta/342-crore-rupess-theft-train-rbi-didnt-inform-railway.html
No comments:
Post a Comment