27.1.12

ஐ.நா. அமைதி படையில் இலங்கை போர்க் குற்றவாளி! Major Gen. Sahvendra appointed to UN advisory peacekeeping group

ஐ.நா. அமைதிப்படையில் இலங்கை இராணுவத்தின் போர்க் குற்றவாளியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். 

ஐ.நா.வுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, ஐ.நா. அமைதிகாப்புப் படையின் நடவடிக்கைகள் தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் சிறப்பு ஆலோசனைக் குழுவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய பசிபிக் நாடுகள் குழுவின் சார்பிலேயே இவர் இந்த ஆலோசனைக் குழுவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

குழுவில் அங்கம் வகிக்கும் உயர்மட்டத் தூதுவர்கள் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து சவீந்திர சில்வா பணியாற்றவுள்ளார். 

இந்த ஆலோசனைக் குழுவுக்கு ஐ.நாவின் முன்னாள் பிரதிச்செயலரும் கனடாவின் முன்னாள் பிரதி தேசிய பாதுகாப்பு அமைச்சருமான லூயிஸ் பிரெசிரே, ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளுக்கான கீழ்நிலைச் செயலருமான ஜீன் மேரி குகேனோ ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இந்தக் குழு முதல்முறையாக இந்த மாதம் கூடி தமது பணிகளை கவனிக்கத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சவீந்திர சில்வா போர்க்குற்றங்களை இழைத்ததாக அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகளால் குற்றம் சாட்டப்பட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.



English Summary

Major General Shavendra Silva – Deputy Permanent Representative of Sri Lanka to the United Nations has been selected to the Special Advisory Group on Peace Keeping Operations established by the UN Secretary General to advise on rates of reimbursement to troop-contributing countries and related issues.

No comments:

Post a Comment